Vettri

Breaking News

சுமார் 5 கோடி பெறுமதியான நீல மாணிக்கற்களை பெற்று செல்லுபடியற்ற காசோலைகளை வழங்கிய வர்த்தகர் கைது....




  




சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 10 நீல மாணிக்கற்களை பெற்று செல்லுபடியற்ற காசோலைகளை வழங்கியதாக கூறப்படும் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பேருவளை பிரதேசத்தில் மாணிக்கக்கல் வர்த்தகர்கள் இருவரினால் முன்வைக்கப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபரான வர்த்தகர் முறைப்பாட்டாளரான பேருவளை வர்த்தகரிடம் இருந்து 33 இலட்சத்து 13 ஆயிரம் ரூபா பெறுமதியான,


09 நீல மாணிக்கற்களை பெற்று அதற்கான காசோலைகளை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


அதேபோன்று, அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மாணிக்கக்கல் வர்த்தகரிடம் இருந்து 13 இலட்சத்து 50,000 ரூபா பெறுமதியான நீலக்கல் ஒன்றும் பெறப்பட்டு அதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேகத்திற்குரிய வர்த்தகர் இரண்டு மாணிக்கக்கல் வர்த்தகர்களுக்கு வழங்கிய 8 காசோலைகளை அந்த வங்கியில் ஒப்படைத்ததன் பின்னர் அவை பெறுமதியற்ற காசோலைகள் என தெரியவந்துள்ளது.


இது தொடர்பில் மாணிக்கக்கல் வர்த்தகர்கள் சந்தேக நபருக்கு அறிவித்தும் பணத்தை வழங்குவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படாததால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஜா-அல, ஏகல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments