Vettri

Breaking News

இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்த மாணவர்கள்




பாடசாலைகளுக்கிடையிலான 17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற குறித்த போட்டியில், கொழும்பு ரோயல் கல்லூரியின் வினுக விஜேரத்ன 02 தங்கப் பதக்கங்களையும், மாத்தறை சுஜாதா கல்லூரியின் ஹோசித்மி பெஹன்சா சமரவீர மற்றும் இரத்தினபுரி பெர்குசன் உயர் கல்லூரியின் இலிஷா உமண்டி முதலி ஆகியோர் ஒரு தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளனர். அத்துடன் வத்தளை லைசியம் கல்லூரியின் துலன் பிம்சாட் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதக்கங்களை வென்ற இலங்கை சதுரங்க அணி இன்று (23) அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments