Vettri

Breaking News

கடந்தாண்டில் 463 யானைகள் உயிரிழப்பு!!!




2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உயிரிழந்த யானைகளில் கடந்தாண்டே பெருமளவான யானைகள் உயிரிழந்துள்ளதாக மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை மனித ஈடுபாட்டினால் ஏற்படுவதாகவும் ரவீந்திர காரியவசம் தெரிவித்தார். யானைகளின் எண்ணிக்கையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அது சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலை தொடருமானால், இலங்கையில் காட்டு யானையைக் கண்டறிவது அரிதான நிகழ்வாகிவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

No comments