Vettri

Breaking News

முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டம்!




சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில் சதொச ஊடாக குறித்த முட்டைகளை 35 ரூபாவுக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை உணவங்களுக்கு மாத்திரம் மொத்த விலையில் விற்பனை செய்ய இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு அதனை நுகர்வோருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை விடுவிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாளாந்தம் சுமார் ஒரு இலட்சம் முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

No comments