Vettri

Breaking News

இவ்வாண்டு டெங்குவிற்கு 33 பேர் பலி





 டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இந்த வருடம் 52,021 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே 25,945 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு அபாயம் அதிகமாக உள்ள 61 MOH பிரிவுகளை மையமாக வைத்து நாளை (13) முதல் மூன்று நாட்களுக்கு விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

No comments