Vettri

Breaking News

மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இந்திய பிரதமரால் 3ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு




 இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3ஆயிரம் மில்லியன் ரூபாய், கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இதில் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும் உள்ளடங்கும் - என்று ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவிற்கான பயணம்

மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இந்திய பிரதமரால் 3ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு | 3000 Million Rs For Sl Upcountry People Indian Pm

இரு நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு (21) நாடு திரும்பிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், கொழும்பு - கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிற்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

" அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தியா சென்றிருந்தோம், மலையக மக்களின் பிரச்சினைகள், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம், எரிசக்தி மற்றும் மின்சக்தி துறைக்கான முதலீடுகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன. இவை தொடர்பில் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.

No comments