வயிற்றுவலிக்கு சிகிச்சை பெறச் சென்ற 21 வயதான யுவதி திடீரென உயிரிழப்பு!
வயிற்றுவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்ற 21 வயதான யுவதியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில், குறித்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தின் காரணமாக யுவதி மரணித்ததாக அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடுகண்ணாவை – பொத்தப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வயிற்றுவலி காரணமாக குறித்த யுவதி நேற்று பேராதனை போதனா வைத்தியசாலையின் 7 ஆவது சிகிச்சை அறையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்போது அவருக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்டதாகவும்;, அதனையடுத்து அவர் உயிரிழந்ததாகவும் யுவதியின் சகோதரர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
இந்தநிலையில், பேராதனை வைத்தியசாலையும், பேராதனை காவல்துறையினரும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் மீதான சட்ட வைத்திய பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
No comments