2,070 பல்கலைக்கழக கல்வி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – அமைச்சர்!!
2,070 பல்கலைக்கழக கல்வி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – அமைச்சர்!!
இலங்கையில் அரச பல்கலைக்கழகங்களில் 2,070 கல்விப் பணியிடங்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2021-2023 காலப்பகுதியில் ஏறக்குறைய 1,300 ஊழியர்கள் சேவையை விட்டு விலகி ஓய்வு பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான ஆட்சேர்ப்புகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சேவையை விட்டு வெளியேறிய ஊழியர்களின் எண்ணிக்கை 519 ஆகவும், 663 ஊழியர்கள் பணியிலிருந்து விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வியமைச்சர் பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments