100 ஆண்டுகள் பழைமையான பாலம் ! உயிராபத்துக்கு மத்தியில் பயணிக்கும் மக்கள்!
பூண்டுலோயா நகரிலிருந்து அக்கரைமலை தோட்டத்துக்கு செல்லும் பாலம் மிகவும் ஆபத்தானதான நிலையில் உள்ளதாக டன்சின் கீழ் பிரிவு அக்கரைமலை தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இத் தோட்டத்துக்கு செல்லும் மிக அண்மித்த பாதையாக இப் பாலமே உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, பாலத்தை தவிர்த்து மாற்று வீதியால் பயணித்தால் சுமார் 9 கிலோ மீற்றர் தூரம் மேலதிகமாக செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
100 ஆண்டுகள் பழைமையான இந்த பாலம் மிக மோசமாக சேதமடைந்திருப்பதால் உயிரை பணயம் வைத்தே நாளாந்தம் இதனூடாக பயணம் செய்வதாக அக்கரைமலை தோட்ட மக்கள் அச்சம் வௌியிடுகின்றனர்.
பாலத்தை புனரமைத்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என இம் மக்கள் உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
No comments